A+ A-

வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு மிகப்பெரிய கிரகத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் மெளனா கியா மலையில் ஜப்பான் அமைத்த சுபாரு தொலைநோக்கி தான் இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
Super-Jupiter என்று பெயரிட்டுள்ள இந்த புதிய கிரகமானது, Kappa Adromedae b என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது.
இந்த நட்சத்திரமும் சூரியனை விட இரண்டரை மடங்கு பெரியதாம். ஆனால் இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள் தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால் Super-Jupiter-ன் வயதும் குறைவானதாகவே இருக்கும் என்று தெரிகிறது.
நமது சூரியனின் வயது 5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்த கிரகத்துக்கும் அது சுற்றிக் கொண்டிருக்கும் நடத்திரத்துக்கும் இடையிலான தூரம் கூட மிக மிக அதிகமாக உள்ளது.
வழக்கமாக ஒரு நடத்திரத்தை (சூரியன்) தான் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் தான் அதைச் சுற்றி வரும் கிரகங்களை கண்டுபிடிப்பார்கள்.
ஆனால் இங்கு முதலில் Super-Jupiter தான் தொலைநோக்கியில் சிக்கியது. இது தனியாக மிதந்து கொண்டிருக்கிறதே, இது சுற்றி வரும் சூரியன் எங்கே என்று நீண்ட தேடலுக்குப் பின்னரே Kappa Adromedae b என்ற நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.