A+ A-

சீனாவில் அதிவேக ரயில் சேவை தொடக்கம்

சீனாவில் 2,300 கிலோ மீற்றர் தூரத்துக்கு அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
அதிவேக ரயில் சேவையில் உலக அளவில் சீனா முன்னோடியாக உள்ளது.
சீனாவின் பல நகரங்களுக்கு "புல்லட் ரயில்" எனப்படும் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்தாண்டு தலைநகர் பீஜிங்கிலிருந்து, ஷாங்காய் நகருக்கு மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை தொடக்கப்பட்டது. இதன் மூலம் 1,300 கி.மீ., தூரத்தை இந்த ரயில் 4:50 மணி நேரத்தில் சென்றடைகிறது.
இந்நிலையில் பீஜிங்குக்கும், ஹாங்காங் அருகே உள்ள குவாங்சோ நகருக்கும் இடையே நாளை மறுநாள் அதிவேக ரயில் தினமும் இயக்கப்படுகிறது.
2,300 கி.மீ தூரத்தை இந்த ரயில் 7:60 மணி நேரத்தில் கடக்கும். இதற்கான சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன.
விமான கட்டணத்தை விட இந்த ரயில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், நாளை மறுநாள் இந்த ரயிலில் பயணிப்பதற்கு இப்போதே 2,000 பேர் முன்பதிவு செய்து விட்டனர்.