A+ A-

பெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையும் , கட்டு கதையும் !!!

நீங்கள் ஒரு வரைபடத்தில் இதைக் காண முடியாது என்றாலும், பெர்முடா முக்கோணம் உண்மையாகவே உள்ளது. கடந்த காலத்தில் நிறைய கப்பல்கள், விமானங்கள் மற்றும் மக்கள் பலரும் காணமால் போய் உள்ளனர். பல சம்பவங்களுக்கு நம்பும்படியான விளக்கம் இருந்தாலும் , அங்கு நடந்த பல சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இன்று வரை எந்த அறிவியல்ரீதியான விளக்கமும் இல்லை ! பெர்முடா முக்கோணம் மியாமி, போர்டோ ரிகோ மற்றும் பெர்முடாஸ் இடையே புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 500 000 சதுர மைல்களை உள்ளடக்கியது. பெர்முடா முக்கோணத்தை, சாத்தானின் முக்கோணம் என்று கூட அழைப்பர் , ஏனெனில் பெர்முடாவை முற்காலத்தில் சாத்தானின் தீவு என்று அழைத்தனர் !