A+ A-

ஆப்பிள் தயாரிக்கும் கணிப்பொறிக் கடிகாரம்!


apple watch

ஆப்பிள் நிறுவனத்தைப்பற்றி தினமும் பலவிதமான வதந்திகள் வருவது சாதரணமான உண்மைதான். ஐபோன் மற்றும் ஐபேட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் அடுத்ததாக ஆப்பிள் டிவி தயாரிக்கப்போவதாக கடந்த வாரம் வதந்திகள் கிளம்பியது. அனால் தற்பொழுது அதுவும் உண்மை இல்லை என்கின்றனர் இந்த துறையில் உள்ள சில வல்லுனர்கள்.

மேலும் ஆப்பிள் அடுத்ததாக தயாரிக்கப்போவது கைக்கடிகாரம் தானாம். இதை சில நம்பத்தகுந்த வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

இந்த ஆப்பிள் கடிகாரம் 1.5 அங்குல திரைகொண்ட ப்ளுடூத் வசதிகொண்ட கணினியாக செயல்படும். இதில் ஐஒஸ் இயங்குதளம் அடிப்படையாக இருக்கும். எனவே இது கணிப்பொறியின் சிறப்பம்சம்கள் கொண்ட கடிகாரமாக இருக்கும்.

இதை தயாரிப்பதற்காக ஆப்பிள், 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இதன் தொழில்நுட்பக்கூறுகள்:
  • 1.5 அங்குல OLED திரை,
  • ஐஒஸ் இயங்குதளம்,
  • தரமுள்ள புகைப்படங்கள்,
  • தற்பவெப்பம் சார்ந்த தகவல்கள்,
  • இன்னும் சில சிறப்பம்சங்களும் உள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தைப்பற்றி தினமும் பலவிதமான வதந்திகள் வருவது சாதரணமான உண்மைதான். ஐபோன் மற்றும் ஐபேட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் அடுத்ததாக ஆப்பிள் டிவி தயாரிக்கப்போவதாக கடந்த வாரம் வதந்திகள் கிளம்பியது. அனால் தற்பொழுது அதுவும் உண்மை இல்லை என்கின்றனர் இந்த துறையில் உள்ள சில வல்லுனர்கள். மேலும் ஆப்பிள் அடுத்ததாக தயாரிக்கப்போவது கைக்கடிகாரம் தானாம். இதை சில நம்பத்தகுந்த வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.