A+ A-

ஐஒஸ் அப்டேட்டால் விரைவில் தீரும் பேட்டரி!


ஐஒஸ் அப்டேட்டால் விரைவில் தீரும் பேட்டரி!
ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் ஐபோன் 5 மற்றும் ஐபேட் ஆகியவற்றிற்கான அப்டேட்டை வழங்கியது. இதனால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதாக அதன் பயனாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

Wifi போன்றவை பயன்படுத்துவதே பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும் இது வருத்தம் தருவதாகவே பலரும் கூறுகின்றனர்.

இந்த ஐஒஸ் 6.0.1 அப்டேட்டுக்கு முன் பேட்டரியின் அளவு ஒருநாள் முழுவதும் இருந்ததாகவும் ஆனால் தற்பொழுது சில மணிநேரங்களே நிற்கிறதென்றும் வருந்துகின்றனர் அவர்கள்.

மீண்டுமொரு அப்டேட் வந்தால் எல்லாம் சரியாகிவிடுமென்று தோன்றுகிறது. ஆனால் அடுத்த அப்டேட் எப்பொழுதென்று தெரியவில்லை

ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன் ஐபோன் 5 மற்றும் ஐபேட் ஆகியவற்றிற்கான அப்டேட்டை வழங்கியது. இதனால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதாக அதன் பயனாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். Wifi போன்றவை பயன்படுத்துவதே பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும் இது வருத்தம் தருவதாகவே பலரும் கூறுகின்றனர்.