A+ A-

அப்பிளின் அடுத்த தயாரிப்பு Apple iTV



ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான தொலைக்காட்சிப்பெட்டி தயாரிப்பில் முனைப்புடன் இருக்கிறது. போகஸ் தைவான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆப்பிள் ஐடிவி தயாரிப்புக்கு துணைபுரியும் பாக்ஸ்கான், டிவிக்கான முதல் கட்ட சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த டிவியின் அளவுகள் 46 மற்றும் 55 அங்குலங்கள் இருக்குமெனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் அந்த அறிக்கையின் சில தகவல்கள் இங்கே,

இந்த ஐடிவி 2013ன் இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முழுமையான சோதனைகள் வரும் ஜனவரி முதல் தொடங்கப்படுமாம்.
வேறு சில தகவல்களின்படி “இது முழுமையான முடிவல்ல. சிறிய சோதனையே!”. ஆப்பிள் டிவி தயாரிப்பை பொருத்தவரை பல வதந்திகள் வந்தவாறு உள்ளன.
இந்த தொலைக்காட்சிப்பெட்டி ஐஒஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த டிவி சிறந்த தொழில்நுட்பங்கள் கொண்டதாம். சிறப்பான தொலைகாட்சி அனுபவத்தைத் தருமாம்.

எது எப்படியோ ஆப்பிள், இந்த வதந்திகளுக்கு பதிலளித்தால் மட்டுமே நம்பமுடியும். பொறுத்திருந்து பார்ப்போம்!
மேலும் இந்த தொலைக்காட்சி சிறப்பான தொழில்நுட்பங்களை கொண்டதாக இருக்கும் என்றும், IOS இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.