A+ A-

எஸ்எம்எஸ்ஸுக்கு வயசு 20!


எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு இன்றோடு கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதிதான் முதல் எஸ்எம்எஸ் பிறந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர் நீல் பாப்வொர்த் (22) என்பவர் தனது ஆர்பிடெல் 901 செல்போன
ில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலம் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.

ஆனால் வர்த்தக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை 1993ம் ஆண்டு ஸ்வீடனில் தொடங்கியது. அதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் எஸ்.எம்.எஸ். சேவை துவங்கியது.

தொடர்ந்து 1994ம் ஆண்டு எஸ்.எம்.எஸ். சேவையுடன் கூடிய நோக்கியா 2110 போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

தற்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு எஸ்.எம்.எஸ். அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பலர் பிளாக்பெர்ரி மெசஞ்சர், வாட்ஸ்ஆப் மற்றும் கூகுள் டாக்கை பயன்படுத்த அதிகம் விரும்புகின்றனர்.

ஆனால் கல்லூரி மாணவ-மாணவிகள் எஸ்.எம்.எஸ். சேவையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு இன்றோடு கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதிதான் முதல் எஸ்எம்எஸ் பிறந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர் நீல் பாப்வொர்த் (22) என்பவர் தனது ஆர்பிடெல் 901 செல்போன ில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலம் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.