A+ A-

தென் அமெரிக்காவில் எரிமலை வெடிக்கும் அபாயம்

தென் அமெரிக்காவில் சிலி மற்றும் அர்ஜெண்டினா நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள ஆண்டெஸ் மலையில் கேஸ்பாஹு என்ற எரிமலை வெடிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிலி நாட்டின் நிலவியல் மற்றும் கனிமத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த எரிமலையினால் ஆட்களை வெளியேற்றும் கருத்து எதுவும் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
நிலநடுக்கச் செயற்பாடுகளை ஆராயும் போது பேராபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை.
எரிமலை வாயைச் சுற்றி 15 கி.மீ. சுற்றளவுக்கு மணல் சரிவு இருக்கக்கூடும்.
இந்நிலையில் ஆல்ட்டோ பியோபியோ மாவட்டத்தின் ஆளுநரும் அவசர உதவி அதிகாரிகளும் ஞாயிறு மதியம் கலந்து ஆலோசித்தனர்.
சாதாரணமாக இருப்பதை விடக் கூடுதலாக கரும்புகையும் சாம்பலும் 1.5 கி.மீ. தூரத்துக்கு வெளியேறுவதால், எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக, தெற்கு ஆண்டெஸ் மலையின் எரிமலை கூர்நோக்கு மையம் தெரிவித்தது.
கடல் மட்டத்துக்கு மேலே மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மலையில் வரிசையாக ஒன்பது எரிமலைவாய்கள் அமைந்துள்ளன.
கோப்பஹு என்றழைக்கப்படும் இந்த எரிமலை 500,000 ஆண்டுகள் பழமையானது.
18ம் நூற்றாண்டு முதல் சாதாரண மற்றும் மிகச் சாதாரண எரிமலைகள் வெடிப்பு இந்த மலையில் நிகழ்ந்துள்ளது.
இதனால் பரவிய கந்தகத் துகள்கள் நிறைந்த நீர் முந்நூறு மீற்றர் பரப்பிற்கு ஏரி போல நிரம்பியுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டிற்குப் பின்பு மூன்று முறை எரிமலை வெடித்துள்ளது.
கடைசியாக 2000வது ஆண்டில் யூலை மற்றும் அக்டோபர் வரை எரிமலை வெடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வாழ்ந்த மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.