A+ A-

புதன் கோளில் அதிகளவு பனிக்கட்டிகள்: நாசா அறிவிப்பு

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளான புதனின் வட பகுதியில் அதிகளவு பனிக்கட்டிகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


சூரியக் குடும்பத்தின் கோள்களில் ஒன்றான புதன் குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இதனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2004ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மெசன்ஜர் விண்கலம், புதனின் தெற்கு பகுதிக்கு மிக அருகில் வட பகுதியில் தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
இதன் அடர்த்தி 1.5 அடி முதல் 65 அடி வரை இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு வரையிலும் தொடர்ந்து இந்த ஆய்வுகள் நடைபெறும் என்வும் நாசா தெரிவித்துள்ளது.