A+ A-

சூரிய மண்டலத்தில் புதிய பகுதி கண்டுபிடிப்பு

விண்வெளிக்கும், நட்சத்திர கூட்டத்துக்கும் இடையேயான பகுதியை நாசாவின் வாயேஜர்-1 விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
கிரகங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற விண்கலங்களை கடந்த 1977ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
தற்போது இந்த விண்கலங்கள் சூரிய மண்டலத்தில் ஊடுருவி பயணம் செய்து வருகின்றன.
இந்நிலையில் வாயேஜர்-1 என்ற விண்கலம் சூரிய மண்டத்தில் புதிய பகுதியொன்றை கண்டுபிடித்துள்ளது. இது விண்வெளிக்கும், நட்சத்திர கூட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.
இப்பகுதியின் கண்டுபிடிப்பு நாசா விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதுவரையிலும் இப்பகுதியை எந்தவொரு விண்கலமும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாயேஜர்-1 விண்லகம் 900 கோடி மைல் தூரத்தில் பயணம் செய்து வருகிறது.