ஆப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்பான ஆப்பிள் ஐபேடை வரும் மார்ச் மாதத்தில் வெளியிடுமெனத்தெரிகிறது. இந்த வதந்தி மட்டும் உண்மையானால் ஐந்து மாதங்கள் கழித்து அடுத்த தயாரிப்பை வெளியிடப்போகிறது என் நம்பலாம்.நான்காம் தலைமுறை ஐபேடை சென்ற அக்டோபர் மாதத்தில் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இந்த புதிய ஐபேட் ஐந்தாம் தலைமுறை சாதனமாகும். இது தற்போதைய ஐபேடைவிட எளியது மற்றும் தரமுள்ளதாக இருக்கும். இதற்கான சரியான அளவுக்குள் ஏதும் இன்னும் தெரியவில்லை. ஆனால் இது 17மிமீ உயரமிருக்குமெனவும் சிறந்த உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுமெனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
ஆப்பிளின் இந்த முடிவொன்றும் வியக்கத்தக்கதல்ல. ஆன்ட்ராய்டு டேப்லெட்களின் வரவால் ஆப்பிள் நிறுவனமும் தனது பங்கிற்கு புதிய சாதனங்களை வெளியிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கருத்துரையிடுக