A+ A-

கேலக்ஸி எஸ்-3 மினி அறிமுகம் செய்யும் சாம்சங்!


கேலக்ஸி எஸ்-3 மினி என்ற புதிய ஸ்மார்ட்போனை இன்று ஜெர்மனியில் அறிமுகம் செய்கிறது ஸ்மார்ட்போன் உலகில் கலக்கி வரும் சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் மூலம் எலக்ட்ரானிக் மார்கெட்டில் ஏகபோக வரவேற்பை பெற்ற சாம்சங் நிறுவனம், இப்போது புதிதாக கேலக்ஸி எஸ்-3 மினி என்று புதிய ஸ்மார்ட்போனை வழங்குகிறது.
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். ஆனால் இந்த புதிய கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும்.
அதோடு இந்த ஸ்மார்ட்போன் டியூவல் கோர் பிராசஸர் மற்றும் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டாதாக இருக்கும் என்று வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் தெரிவக்கின்றன.
இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் பற்றி அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்த புதிய கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாகும்.