A+ A-

வாடிக்கையாளர்களை குதுகலப்படுத்தும் பிஎஸ்என்எல்


தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது புதிய புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தனது பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது.

பிரிபெய்ட் சிடிஎம்எ பிளான் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் பிரிபெய்ட் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் கீழ் விடுக்கும் எல்லா லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கும் வினாடிக்கு அரை பைசா மட்டும் செலுத்தினால் மட்டும் போதும். இந்த புதிய திட்டம் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
விரைவில் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் இந்த திட்டத்திற்கு ஜாய் சிடிஎம்எ ப்ளான் என்றும் கர்நாடகாவில் ஹார்ஷா சிடிஎம்எ ப்ளான் என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
கேரளாவில் ஜாய் சிடிஎம்எ ப்ரிபெய்ட் திட்டத்தின்படி ரூ.85 செலுத்தி இந்த திட்டத்தைப் பெறவேண்டும். பெற்றபின் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கொண்ட போன்களுக்கு உள்ளூர் அழைப்பாக இருந்தாலும் சரி அல்லது வெலியூர் அழைப்பாக இருந்தாலும் சரி அதற்கு வினாடிக்கு அரை பைசா மட்டுமே செலுத்த வேண்டும். வேறு இணைப்புகளுக்கு பேச வேண்டுமானால் அதற்கு வினாடிக்கு 1 பைசா வீதம் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் முதல் 30 நாள்களுக்கு 250 நிமிட லோக்கல் பிஎஸ்என்எல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 50எம்பி டேட்டா பிரீ போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் 180 நாள்களுக்கு இருக்கும், இதை மீண்டும் செயல்படுத்த வேண்டுமானால் ரூ.34 செலுத்தி மீண்டும் 180 நாள்களுக்கு ரிசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்படும் ஹார்ஷா சிடிஎம்எ திட்டத்தின்படி ரூ.86 செலுத்தி இந்த திட்டத்தைப் பெற வேண்டும். முதல் 30 நாள்களுக்கு 250 நிமிட லோக்கல் பிஎஸ்என்எல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 50எம்பி டேட்டா பிரீ போன்றவை இலவசமாக வழங்கப்படும். 180 நாள்களுக்கு பின் இந்த திட்டத்தை புதுப்பிக்க மேலும் ரூ.86 செலுத்த வேண்டும். அதன் மூலம் 180 நாள்களுக்கான இந்த சேவையைப் பெறலாம்.
அதோடு ஹேப்பி அவர்ஸ் என்ற ஒரு புதிய திட்டத்தையும் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் படி இரவு 8 முதல் 10 வரை பிஎஸ்என்எல் நெட்வொர்க் கொண்டிருக்கும் போன்களுக்கு பேசினால் நிமிடத்திற்கு 10 பைசா மட்டுமே வசூலிக்கப்படும்.