A+ A-

விண்டோஸ் போன் 8ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கும் மைக்ரோசாப்ட்


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் போன் 8 என்று அழைக்கப்படும் தனது புதிய மொபைல் ஆபரேடிங் சிஸ்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
Steve Ballmer Windows Phone 8 Launch
இந்த புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் டைரக்ட் எக்ஸ் மற்றும் வர்த்தகத்திற்கான ஐடி மேனேஜ்மென்ட் சப்போர்ட் போன்றவற்றையும் வழங்கும். மேலும் இந்த புதிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் கேமரா லென்ஸ், புதிய வாலெட் சிஸ்டம், நோக்கியா மேப்ஸ், டேட்டா சென்ஸ் மற்றும் பல புதிய ஹார்ட்வேர்களும் உள்ளன.
விண்டோஸ் போன் 8ல் புதிய லைவ் லாக்ஸ்க்ரீன் உள்ளது. இதன் மூலம் பிங்க் போன்ற ஆன்லைன் சேவைகளிலிருந்து நேரடியாக வால் பேப்பர்களை எடுக்க முடியும். அதுபோல் லைவ் டைல்ஸ்களிலிருந்து டேட்டாக்களையும் எடுக்க முடியும். மேலும் இந்த புதிய சிஸ்டத்தில் கிட்ஸ் கார்னர் என்ற வசதியும் உள்ளது. இது சிறுவர்களுக்கான் அப்ளிகேசன்களை மட்டுமே வழங்கும்.
மேலும் இந்த விண்டோஸ் போன் 8ல் ஸ்கைப் வசதியும் உள்ளது. மேலும் இதில் உள்ள புதிய ரூம்ஸ் என்ற சேவை மூலம் ரகசியமாக உரையாடலாம், படங்கள், காலண்டர்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் இதற்காக ஹாட் மெயிலில் உறுப்பினராக வேண்டும்.
அதோடு தற்போது விண்டோஸ் போன் ஸ்டோரில் மைக்ரோசாப்ட் 1,20,000 அப்ளிகேசன்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இவற்றிலிருந்து 50 அப்ளிகேசன்களை இந்த புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும்.
மேலும் இந்த புதிய சிஸ்டத்தில் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் பண்டோரா போன்ற அப்ளிகேசன்களும் உள்ளன. ஆனால் இந்தியாவில் பண்டோரா வேலை செய்யாது. புதிய விண்டோஸ் போன் 8 ரசிகர்களைப் பெரிதும் கவரும் என்று நம்பலாம்.