A+ A-

சைபர் குற்றங்களைத் தடுக்க பொது மக்களோடு கைகோர்க்கும் மத்திய அரசு..

இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த குற்றங்களினால் நாட்டின் பாதுகாப்பிற்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது.   எனவே சைபர் குற்றங்களைத் தடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களோடு கூட்டணி அமைத்து அதற்கான நடவடிக்கைகளில் மிக விரைவில் இறங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  அதற்கு முன்னதாக 4 மாதிரி ப்ராஜக்டுகளை அரசு செயல் படுத்த இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கள் மேனன் தெரிவித்திருக்கிறது. பரிசோதனைக் கூடங்களை நிறுவுதல், டெஸ்ட் ஆடிட்டை நடத்துதல், முகவரி இல்லாத தகவல்களை ஆழமாகப் படித்தல் மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கான முறையான மையங்களை அமைத்தல் போன்றவை இந்த மாதிரி ப்ராஜெக்டுகளில் உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த குற்றங்களினால் நாட்டின் பாதுகாப்பிற்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

எனவே சைபர் குற்றங்களைத் தடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களோடு கூட்டணி அமைத்து அதற்கான நடவடிக்கைகளில் மிக விரைவில் இறங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதற்கு முன்னதாக 4 மாதிரி ப்ராஜக்டுகளை அரசு செயல் படுத்த இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கள் மேனன் தெரிவித்திருக்கிறது. பரிசோதனைக் கூடங்களை நிறுவுதல், டெஸ்ட் ஆடிட்டை நடத்துதல், முகவரி இல்லாத தகவல்களை ஆழமாகப் படித்தல் மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கான முறையான மையங்களை அமைத்தல் போன்றவை இந்த மாதிரி ப்ராஜெக்டுகளில் உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக சைபர் குற்றங்களால் தான் சமீபத்தித் வடகிழக்கு இந்தியாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் இவ்வாறான சைபர் குற்றங்கள் நாட்டின் ஒற்றுமையைத் தவிடுபொடியாக்கிவிடும். எனவே இந்த குற்றங்களைக் களைய பொதுமக்களும் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேலும் சைபர் குற்றங்களைக் களைய மத்திய அரசு தனியார் நிறுவனத்தோடும் கூட்டணி வைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு ஜேடபுள்யுஜி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் சைபர் குற்றங்கள் கணிசமான அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011ல் மட்டும் இந்த சைபர் குற்றங்களால் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா இழந்ததாக நோர்ட்டன் தகவல் கூறுகிறது. மேலும் 32 சதவீத இளையோர் இந்த சைபர் குற்றங்களுக்கு இரையாகின்றனர் என்றும் அந்த தகவல் கூறுகிறது.