A+ A-

இந்த ஆண்டுக்குள் 10 மில்லியன் ஐபேட் மினி


ஐபேட் மினியைத் தயாரிப்பதில் தீவிரமாக இருப்பதாக ஆப்பிள் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்த தகவல் வெளியானவுடன் ஆப்பிள் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த ஐபேட் மினியை ஆசிய நிறுவனமான டபுள்யுஎஸ்ஜே தயாரிக்கிறது.


இந்த ஆண்டின் காலாண்டில் மட்டும் 10 மில்லியன் ஐபேட் மினி சாதனங்கள் வேண்டும் என்று டபுள்யுஎஸ்ஜேயிடம் விண்ணப்பித்திருக்கிறது ஆப்பிள். இந்த தகவல் உண்மையாக இருக்குமானால் இந்த ஆண்டு இறுதியில் ஆப்பிளின் வர்த்தகம் அமோகமாக இருக்கும் என்று நம்பலாம்.
இந்த ஐபேட் மினி 7.85 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் விலை 350 அமெரிக்க டாலர்களுக்கு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபேட் மினி அமேசான் கிண்டில் பயர் எச்டி மற்றும் ஆசஸ் நெக்சஸ் 7 ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆப்பிள் இன்னும் மொபைல் சந்தையில் முன்னனியில் இருந்தாலும் அதன் சாதனங்களின் விற்பனை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் தற்போது குறைந்த அளவில் அதாவது 7 இன்ச் அளவில் புதிய ஐபேடைக் களமிறக்க இருக்கிறது ஆப்பிள். இதற்கு முன் 7 இன்ச் அளவில் வரும் சாதனங்களை ஆப்பிளின் காரண கர்த்தா ஸ்டீவ் ஜாப்ஸ் கேலி செய்திருந்தார். தற்போது ஆப்பிளே அத்தகைய சிறிய சாதனங்களைத் தயாரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.