A+ A-

கணினி கூடங்களை அமைக்க பஞ்சாப் அரசு திட்டம்!


தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) மாநில திட்டத்தின் கீழ், 795 புதிய கணினி கூடங்கள் அமைக்கப்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்திருக்கிறது.
இன்று மத்திய நிதியுதவி தகவல் திட்டத்தின் கீழ், அனைத்து மேல் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பள்ளிகளில் புதிய கணினி கல்வி கூடம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா தெரிவித்துள்ளார்.
கணினி கூடங்களை அமைக்க பஞ்சாப் அரசு திட்டம்!

பள்ளிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால், மாணவர்களுக்கு கணினி சம்மந்தமான அறிவு மிக அவசியமாக உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பஞ்சாப் அரசு புதிய திட்டங்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை, 795 புதிய கணினி கூடங்கள் மாநில அளவில் அமைக்கப்படுகிறது.
இந்த கணினி கூடத்தின் மூலம் மாணவர்கள் சிறப்பான வகையில் தொழில் நுட்பம் சம்மந்தமான தகவல்களை பெற, ஜெனரேட்டர் கருவி மற்றும் பிராடுபேண்டு சேவை ஆகியவற்றையும் வழங்குவதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா கூறியுள்ளார்.
இதனால் வேலை வாய்ப்பை எளிதாக பெருக்கவும் மற்றும் டிஜிட்டல் சம்மந்தமான பொருளாதாரத்தை சுலபமாக உயர்த்தவும் முடியும் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். இதில் பொருளாதாரம், வேலை வாய்ப்போடு சேர்ந்து தொழில் நுட்பமும் வளர்ந்து வருகிறது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) மாநில திட்டத்தின் கீழ், 795 புதிய கணினி கூடங்கள் அமைக்கப்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்திருக்கிறது. இன்று மத்திய நிதியுதவி தகவல் திட்டத்தின் கீழ், அனைத்து மேல் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பள்ளிகளில் புதிய கணினி கல்வி கூடம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுக்கா தெரிவித்துள்ளார்.