A+ A-

இந்தியாவில் ஆடியோ புக்குகளின் விற்பனையை அதிகரிக்க ரேடோ திட்டம்


ரேடோ ஆடியோபுக்ஸ் நிறுவனம் நிறைய ஆடியோ புக்குகளை விற்பனை செய்யவும் மற்றும் தனது 2000 ஆடியோ புக்குகளை விற்பனை செய்வதற்காக மிகவும் பிரபல ஆடியோபுக் வெளியீட்டாளரான சைமன் & ஷூஸ்டர் ஆடியோ நிறுவனத்துடன் ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் சைமன் & ஷூஸ்டர் நிறுவனத்தில் இருக்கும் ஆடியோ புக்குகளை ரேடோவின் வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக இந்த ஆடியோ புக்குகள் அனைத்தும் பெஸ்ஸ் செல்லிங் பிக்சன், நான் பிக்சன், வர்த்தகம், சுய முன்னேற்றம், உந்து சக்தி, மொழிகளைக் கற்கக்கூடிய தகவல்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகிய பிரிவுகளில் வருகின்றன.
பெஸ்ட் செல்லிங் பிக்சன் பிரிவில் ஸ்டீவ் ஜாப்சின் வால்டர் ஐசக்ஸன், ரோன்டா பைரினின் த சீக்ரெட், டேல் கார்னிஜின் ஹவ் டூ வின் பிரன்டஸ் அன்ட் இன்புலூவனஸ் பீப்பிள் மற்றும் ஸ்டீபன் கிங்கின் அன்டர் த டூம் போன்ற புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
அதுபோல் இந்தியாவின் மிகப் பிரபலமான புத்தகங்களையும் ரேடோ எம்பி3 ஆடியோ பார்மட்டில் தயாரித்திருக்கிறது. குறிப்பாக இம்மார்டல்ஸ் ஆப் மெலுவா, ஸ்டே ஹங்கிரி ஸ்டே பூலிஷ், டோர்க், ஷெர்லாக் ஹோல்ம்ஸ், த ஜங்கிள் புக் மற்றும் காந்திய சிஇஒ போன்ற புத்தகங்களை இதில் பார்க்கலாம்.
இன்னும் 6 மாதங்களுக்கு இந்த ஆடியோ புக்குகளின் விற்பனையை 50 முதல் 60 சதவீதம் அளவிற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக ரெடோவின் தலைவர் சுனஜா தெரிவித்திருக்கிறார். மேலும் இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஆடியோ புக்குகளின் விற்பனை 100 சதவீதத்தைத் தொடும் என்றும் நம்புகிறார்.