A+ A-

2013க்கான புதிய போன்களைத் தீவிரமாகத் தயாரித்து வரும் சோனி


2012 ஆம் ஆண்டும் முடியு தருவாயில் இருக்கும் நிலையில் எல்லா மொபைல் நிறுவனங்களும் 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மொபைல்களைத் தயாரிக்கும் பணியில் மிகத் தீவிரமாக இருக்கின்றன.

அந்த வகையில் சோனி நிறுவனம் ஆடின் என்ற பெயரில் சி650எக்ஸ் என்று ஒரு ஸ்மார்ட்போனைத் தயார் செய்து வருகிறது. இந்த போன் ஏராளமான தொழில் நுட்பங்களுடன் மிகவும் சூப்பராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ஆடின் போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளம் மற்றும் சோனி பர்ம்வேர் போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் சோனி இந்த போனை சி6502, சி6503 மற்றும் சி6506 ஆகிய 3 மாடல்களில் களமிறக்க இருக்கிறது.
இவை மூன்று புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே வந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் எக்ஸ்பீரிய டிப்போ போன்களைப் போல 2 புதிய தொடக்க நிலை போன்களையும் சோனி களமிறக்க இருக்கிறது.
இந்த டிப்போ டேப்லெட் 3.2 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரை, 3ஜி, எட்ஜ், ஜிபிஆர்எஸ், எச்எஸ்டிபிஎ, எச்எஸ்யுபிஎ, வைபை, ப்ளூடூத், 3.15எம்பி கேமரா மற்றும் 2.9ஜிபி மெமரி, அதை விரிவு செய்ய மைக்ரோ எஸ்டி கார்டு போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. இந்த டிப்போ ரூ.9999க்கு விற்கப்படுகிறது.