A+ A-

70 சேனல்களை இலவசமாக வழங்கும் டிஷ் டிவி


இந்தியாவில் கேபிள் டிவியை மற்றும் டிவி பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டிஷ் டிவி நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு பெரிய நகரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அதன்படி இந்த நான்கு நகரங்களில் இருக்கும் டிஷ் டிவியின் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படையான 70 சேனல்களை இலவசமாக வழங்க இருக்கிறது. இந்த தகவல் இந்த நான்கு நகரங்களில் வாழும் டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆப் இந்தியா (டிஆர்எஐ) கேபிள் சேவையை வழங்கும் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களிடம் குறைந்த பட்சம் ரூ.100 வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.
இந்த டிஷ் டிவியின் இந்த புதிய சேவை புதிதாக வாடிக்கையாளர்களாக சேருபவர்களுக்கு மட்டுமே தற்சமயம் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் விரைவில் எல்லா டிஷ்டிவி வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த புதிய சேவையின் மூலம் தமது டிஷ் டிவி நிறுவனம் வாடிக்கையாளர்களின் சிறந்த நண்பனாக இருக்க விரும்புவதாக டிஷ் டிவியின் தலைமை இயக்குனர் ஆர்.சி.வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் போட்டியைச் சமாளிக்க முடியும் என்றும் நம்புகிறார். ஆனால் இந்த புதிய சேவையைப் பெற புதிய வாடிக்கையாளர்கள் டிஷ் டிவியின் செட்டப் பாக்ஸை வாங்க வேண்டும். பின் அதை 6 மாதங்களுக்கு ரூ.200 செலுத்தி முதலிலேயே ரிசார்ஜ் செய்ய வேண்டும்.