A+ A-

கேமிங் லேப்டாப்பைத் தொடர்ந்து புதிய கேமிங் டேப்லெட்டைக் களமிறக்கும் ரேசர்


ரேசர் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தி்ல் ப்ராஜெக்ட் பியோனா என்ற ஒரு புதிய கேமிங் டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்தது. இந்த புதிய கேமிங் டேப்லெட்டுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்று அறிய ரேசரின் தலைமை இயக்குனர் மின் லியாங் டான், பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்டார்.
இந்த புதிய டேப்லெட்டை விரும்புவதாக 11,000 பேர் பேஸ்புக்கில் விருப்பம் தெரிவித்திருந்தனர். ரசிகர்களின் இந்த வரவேற்பை அறிந்து தற்போது இந்த டேப்லெட்டை மிக விரைவில் களமிறக்க ரேசர் தற்போது தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதில் கேம் விளையாடுவதற்கு ஏற்ப அகன்ற திரையுடன் வருகிறது. அதாவது 10.1 இன்ச் தொடு திரையைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டில் ஐவி பிரிட்ஜ் ஜெனரேசன் கோர் ஐ7 சிப்பைக் கொண்டிருப்பதால் இதில் மிக அருமையாக வேகமாக விளையாட முடியும்.
மேலும் இந்த டேப்லெட் வீடியோகேம் பிரியர்களைக் குறிவைத்து வருவதால் அனலாக் ஸ்டிக்கையும் வழங்குகிறது. இந்த புதிய டேப்லெட் விற்பனையில் சாதனை படைக்கும் என்று நம்பலாம்.
கடந்த மாதம் ரேசர் ப்ளேட் என்று ஒரு புதிய கேமிங் லேப்டாப்பை ரேசர் அறிமுகம் செய்தது. இந்த கேமிங் லேப்டாப் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது. அதாவது இந்த லேப்டாப்பில் 3ஜி இன்டல் க்வாட் கோர் ப்ராசஸர், என்விடியா ஜிடிஎக்ஸ் 660எம் க்ராபிக்ஸ் கார்டு, 17.3 இன்ச் டிஸ்ப்ளே, 2ஜிபி டிடிஆர்5 வீடியோ மெமரி, 8ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம், 500ஜிபி எச்டிடி, 7200 ஆர்பிஎம் சேமிப்பு மற்றும் என்வெலோ டேட்டைப்ளக்ஸ் சாப்ட்வேர் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது.
எக்கச்சக்க தொழில் நுட்பங்களுடன் இந்த ரேசர் லேப்டாப் வருவதால் இதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. அதாவது 2,499 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.1.4 லட்சத்திற்கு விற்கப்பட இருக்கிறது.