A+ A-

கேலக்ஸி எஸ் III மினியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் சாம்சங்


மொபைல் துறையில் முன்னனியில் இருக்கும் சாம்சங் சமீபத்தில் கேலக்ஸி எஸ் III மினி என்று புதிய போனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. மேலும் இந்த மினி போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகிறது.

இந்த கேலக்ஸி மினி போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 4 இன்ச் அளவில் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் எஸ்டி எரிக்சன் நோவதோர் ப்ராசஸருடன் வருகிறது. அதனால் இந்த போன் அபாரமான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.
அதுபோல் இந்த போனில் 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் என்எப்சி விஜிஎ முகப்பு கேமரா ஆகியவை இருப்பதால் இந்த கேமராக்கள் மூலம் அருமையான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க முடியும். அதோடு சிறந்த வீடியோ உரையாடலையும் நடத்த முடியும்.
மெமரியைப் பொருத்தவரை இந்த போனில் 8 அல்லது 16ஜிபி மெமரி உள்ளது. மேலும் 1ஜிபி ரேமுடன் இந்த போன் வருகிறது. இந்த போன் ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருவதோடு மட்டும் அல்லாமல் சாம்சங்கின் டச்விஸ் நேச்சர் யுஎக்ஸ் சாப்ட்வேருடன் வருகிறது.
இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் ஜிபிஆர்எஸ், ப்ளூடூத் மற்றும் வைபை போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த மினி போன் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த போன் ஒரு சில முக்கிய வீடியோ கேம்கள் மற்றும் அப்ளிகேசன்கள் போன்றவற்றுடன் களம் இறங்க இருக்கிறது.
இந்த மினி போனின் விலை மற்றும் விற்பனைக்கு வரும் தேதி ஆகியவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Samsung Galaxy S3 Mini Photo Shots

Samsung Galaxy S3 Mini Photo Shots