A+ A-

மாணவர்களுக்கான புதிய பென்டா டி-பேட் டேப்லட்!


எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கும் பேன்டல் நிறுவனம் பட்ஜெட் விலை கொண்ட பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703-சி டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது.
இந்த டேப்லட் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. கவர்ச்சிகரமான விலை கொண்ட இந்த டேப்லட்டினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த டேப்லட்டின் தொழில் நுட்ப விவரங்களை ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம்.

7 இஞ்ச் திரை கொண்ட இந்த டேப்லட் 3-டி தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். அதனால் இதில் சர்வ சாதாரணமாக 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இந்த டேப்லட் 3ஜி டோங்கில் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதன் கேமராக்களின் மெகா பிக்ஸல் குறைவாக தான் இருக்கிறது. இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் ரியர் கேமராவினையும் பயன்படுத்தலாம்.
கேமராவின் மெகா பிக்ஸல் குறைவானதாக இருப்பினும், இதில் சிறந்த மெமரி வசதியினையும் பயன்படுத்தலாம். இந்த டேப்லட்டில் 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியும், 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதியினையும் எளிதாக பெறலாம்.
1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த டேப்லட் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கும்.
3டி திரை தொழில் நுட்பம், எடிஎம்ஐ போர்ட் போன்ற பல சவுகரியங்களை இந்த பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703-சி டேப்லட்களில் பெறலாம். இந்த டேப்லட்களை முதலில் பெறும் வாடிக்கையாளர்கள், மாணவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மொத்தமாக 674 டேப்லட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலை கொண்ட இந்த டேப்லட்டை ரூ. 6,999 விலையில் பெறலாம்.