A+ A-

புதிய அப்டேஷன் வசதியினை வழங்கும் லாவா!


இன்டெல் பிராசஸர் கொண்டு இயங்கும் ஸோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்குகிறது லாவா நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் போதே ஐசிஎஸ் அப்டேஷனை வழங்குவதாக கூறியிருந்த லாவா நிறுவனம் அந்த வார்த்தைக்கு தகுந்த வகையில் இப்போது ஸோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதள அப்டேஷன் வசதியினை வழங்குகிறது.
ஸோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போன் அறிமுகமான சமயத்தில் இதில் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டிருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியினை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றி வேறெந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.
4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 600 x 1024 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பயன்படுத்தலாம். இனி ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெற முடியும்.