A+ A-

யூடியூப்பில் புதிய பயனர் இடைமுகத்தி​னை(Theam) பெறுவதற்கு....

உலகின் முன்னணி வீடியோ தளமாகத் திகழும் யூடியூப்பானது பயனர்களுக்கான புதிய இடைமுகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இப்புதிய இடைமுகத்தின் ஊடாக YouTube Subscriptions, Recommendation, Playlist, User Stream, History, Watch Later videos போன்றவற்றினை இலகுவாக கையாளக்கூடியவாறு காணப்படுவதுடன் மேலதிகமான Google Plus விருப்பங்களை பெற்றுக் கொள்வதற்கான வசதியையும் தருகின்றது.
இவ்வசதியினை உங்கள் உலாவியில் பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாளவும்.
1. முதலில் யூடியூப் தளத்திற்கு செல்லவும்.
2. அதன் பின்னர் Browser Developer Console வசதியினை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனைப் பெறுவதற்கு ஒவ்வொரு உலாவிகளினதும், இயங்குதளங்களினதும் அடிப்படையில் Shortcut Key-களை பயன்படுத்த முடியும்.
அவையாவன,
Windows/Linux/ChromeOS இயங்குதளங்களில் Chrome உலாவி பயன்படுத்தின் Ctrl + Shift + J என்பதினை அழுத்தவும் அல்லது Mac இயங்குதளத்தில் Chrome உலாவி பயன்படுத்தின் Command + Option + J என்பதினை அழுத்தவும்.
Windows/Linux இயங்குதளங்களில் Opera உலாவி பயன்படுத்தின் Ctrl + Shift + K என்பவற்றினையும், Mac இயங்குதளத்தில் Firefox உலாவி எனின் Command + Option + K என்பவற்றினையும் அழுத்துக.
Windows/Linux இயங்குதளங்களில் Firefox உலாவி பயன்படுத்தின் Ctrl + Shift + I என்பவற்றினையும், Mac இயங்குதளத்தில் Firefox உலாவி எனின் Command + Option + I அழுத்தி "Console" tab இனை தெரிவுசெய்யவும்.
Internet Explorer எனின் F12 இனை அழுத்தி "Console" tab இனை தெரிவுசெய்யவும்.
3. தொடர்ந்து தோன்றும் Browser Developer Console பகுதியினுள் பின்வரும் code-இனை பிரதி செய்து Enter செய்து Console-இனை மூடவும்.

document.cookie="VISITOR_INFO1_LIVE=jZNC3DCddAk; path=/; domain=.youtube.com";window.location.reload();
4. மீண்டும் பழைய பயனர் இடைமுகத்திற்கு செல்ல வேண்டும் எனின், மேலுள்ள படிமுறைகளைத் தொடர்ந்து Console பகுதியில் document.cookie="VISITOR_INFO1_LIVE=; path=/; domain=.youtube.com";window.location.reload(); -இனை பிரதி செய்யவும்.