A+ A-

சர்வதேச அளவில் முதல் பொறியியல் மையம் துவங்கும் ஃபேஸ்புக்!


சமூக வலைத்தளங்களில் தனி சாம்ராஜ்ஜியம் செலுத்தி வரும் ஃபேஸ்புக், சர்வதேச அளவில் தனது முதல் பொறியியல் மையத்தை லண்டனில் துவங்கி உள்ளது.

பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிக பெரிய லட்சியம். இந்த லட்சியக் கனவை நிஜமாக மாற்ற வழி வகுத்திருக்கிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக்கின் இந்த புதிய பொறியியல் மையம் கடந்த செவ்வாய் கிழமையன்று வெற்றிகரமாக இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பொறியியல் நிறுவனத்தில் கைதேர்ந்த வல்லுனர்களும், சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களும் சேர்க்கப்படுவார்கள். இதனால் ஏற்கனவே உலகில் பெரிய அவதாரம் எடுத்திருக்கும் ஃபேஸ்புக், புதிய விஸ்பவரூபம் எடுக்கத் தயாராகி வருகிறது.
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அதிகமாக மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் இன்னும் மேம்படுத்தப்பட்ட வகையில் பல வசதிகள் உருவாக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பல மடங்கு அதிகமான வசதிகளை ஃபேஸ்புக் வலைத்தளம் சிறப்பாக
வழங்கும் என்று கருதப்படுகிறது.
சிறு வயதில் இருப்பவர்கள் முதல் பெரிய வயதுகாரர்கள் வரை தன் பக்கம் வசீகரிக்க வைத்து வரும் ஃபேஸ்புக், இனி புதித விஸ்வரூபம் எடுக்கும் என்றும் பெரிய அளவில் எதிர்பார்க்க வைக்கிறது இந்த லண்டன் பொறியியல் மையம்.