A+ A-

சம பலத்துடன் மோது மைக்ரோமேகஸ் மற்றும் இன்டெக்ஸ் டேப்லெட்டுகள்


இந்திய மொபைல் சந்தையில் பெரும்பாலும் விலை குறைந்த மொபைல்கள் விற்பனையில் சாதனை புரிகின்றன. ஏனெனில் இந்திய நுகர்வோர் மொபைல் எவ்வளவு தரமாக இருந்தாலும் அதன் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தியாவில் குறைந்த விலை போன்கள் அதிகம் விற்பனையாகின்றன.

தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பன்புக் அல்பா என்று ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டை ரூ.5,999க்கு இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த டேப்லெட்டுக்கு போட்டியாக இன்டெக்ஸ் நிறுவனம் ஐ பட்டி என்ற ஒரு புதிய டேப்லெட்டை ரூ.5,499க்கு விற்பனைக்கு விட்டிருக்கிறது.
குறைந்த விலையில் வரும் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது இந்த இரண்டு டேப்லெட்டுகளும் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகின்றன. அதுபோல் இந்த இரண்டுமே 7 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டுள்ளன.
ப்ராசஸரைப் பொருத்தவரை இந்த இரண்டுமே சிங்கிள் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் மற்றும் மாலி 400 ஜிபியு போன்றவற்றைக் கொண்டுள்ளன. இரண்டு டேப்லெட்டுகளும் 0.3எம்பி முகப்புக் கேமராவைக் கொண்டிருந்தாலும் இரண்டுமே பின்பக்கக் கேமராவைக் கொண்டிருக்கவில்லை.
மேலும் இரண்டு டேப்லெட்டுகளும் 512எம்பி ரேம் மற்றும் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்டெக்ஸ் 8ஜிபி இன்டர்னல் சேமிப்பையும், அல்பா 4ஜிபி சேமிப்பையும் கொண்டிருக்கின்றன.
இணைப்பு வசதியைப் பார்த்தால் இன்டெக்ஸ் இரண்டுமே 3ஜி, வைபை, மைக்ரோ யுஎஸ்பி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன. இதில் அல்பா ப்ளூடூத் வசதியைக் கொண்டுள்ளது. ஆனால் இன்டெக்சில் ப்ளூடூத் வசதி இல்லை.
இந்த இரண்டு டேப்லெட்டுகளும் சம அளவில் தொழில் நுட்ப வசதிகளில் வந்தாலும் அல்பா டேப்லெட்டில் டாக்குமென்ட் எடிட்டர், டெக்ஸ் எடிட்டர் மற்றும் பிற அப்ளிகேசன்கள் வருகின்றன.
அதே நேரத்தில் பல அப்ளிகேசன்களுடன் வரும் இன்டெக்ஸ் டேப்லெட் ஆங்கிரி பேர்ட்ஸ், ப்ரூட் நிஞ்சா மற்றும் கட் த ரோப் போன்ற வீடியோ கேம்களையும் கொண்டிருக்கிறது.