A+ A-

புதிய அளவில்லா சேவையினை வழங்கும் வோடாஃபோன் இந்தியா!


வோடாஃபோன் இந்தியா தனது மொபைல் சந்தாதாரர்களுக்கும் புதிய அளவில்லா சேவையினை அளிக்க திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இடங்களகுக்கு வருகை தருபவர்களுக்கு, இன்டர்நெட் சேவையில் புதிதாக அளவில்லா (அன்லிமிடேடு) சேவையினை அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வர்த்தகம் சம்மந்தமாக நிறை பேர் வந்து செல்கின்றனர். இதனால் இந்நாடுகளுக்கு வருகை தரும், வோடாஃபோன் சந்தாதாரர்களுக்கு புதிய அளவில்லா சேவையினை வழங்க திட்டமிட்டிருக்கிறது வோடாஃபோன் இந்தியா நிறுவனம்.
நாடு தாண்டி வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு இன்டர்நெட் என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் வோடாஃபோன் மொபைல் சந்தாரர்கள் சிறப்பான இன்டர்நெட்டை எளிதாக பயன்படுத்த புதிய அன்லிமிட்டடு சேவையினை வழங்குகிறது வோடாஃபோன் இந்தியா.
இந்த அளவில்லா சேவையினை, அன்லிமிட்டடு இன்டர்நேஷனல் ரோமிங் டேட்டா பேக்கேஜ் என்ற புதிய திட்டத்தின் மூலம் பெறலாம். வோடாஃபோன் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த அளவில்லா டேட்டா ப்ளான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அளவில்லா சேவையில் 3 விதமான பேக்கேஜ்கள் இருக்கின்றன. இதில் ரூ. 1,499 கட்டணத்தில் 3 நாளுக்கான சேவையினையும், ரூ. 2,499 கட்டணத்தில் 5 நாட்களுக்குண்டான சேவையினையும் மற்றும் ரூ. 3,499 விலையில் 7 நாட்களுக்கான சேவையினையும் எளிதாக பெறமுடியும்.
இன்டர்நெட்டின் தேவை அதிகரித்து வருவதால், குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவை வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படுகிறது. அந்த சிறப்பான சேவையினை வோடாஃபோன் இந்தியா வழங்கும் அன்லிமிட்டடு இன்டர்நேஷனல் ரோமிங் டேட்டா பேக்கேஜ் திட்டத்தில் பெற முடியும்.
இதனால் நாடு கடந்து சென்று, மொபைல் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தினாலும் அதிகமான கட்டணம் இல்லாதது போன்ற பல சிறப்பு அம்சமங்களை பெற முடியும். பயணத்தின் போது கூட சிறப்பான டேட்டா சேவையை பெறலாம் என்று வோடாஃபோன் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி சுனில் சூட் தெரிவித்திருக்கிறார்.
வோடஃபோன் இந்தியா ரூ 32,000 கோடி வருவாயினையும், 153 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கும் சிறப்பான சேவையினையும் வழங்கி வருகிறது என்பது கூடுதல் தகவல்.