A+ A-

ஸ்பீடான இன்டர்நெட் வசதியுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!


புதிய ஸ்மார்ட்போன்களின் வரவினை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம். எச்டிசி டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போனை புதிதாக சந்தையில் களமிறக்கிறது எச்டிசி நிறுவனம். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் சிறப்பாக இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், நிறைய அசர வைக்கும் வசதிகளையும் வழங்கும்.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் எளிதாக பெறலாம். இதன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியில் எல்சிடி திரை தொழில் நுட்பத்தினையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியமும் கிடைக்கும்.
ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள், 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் எளிதாக வழங்குவதாக இருக்கும். இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு ஒரு முக்கிய தகவலும் இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் வைபை நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 25ஜிபி வரை ஃப்ரீ ட்ராப்பாக்ஸ் ஸ்டோரேஜ் வசதியை அளிக்கும். எச்டிசி டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 19,799 விலை கொண்டதாக இருக்கும்.