A+ A-

ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தின் சிறப்பு வசதிகள்!


நிறைய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தின் புதுமை என்னவென்பதையும் பார்க்கலாம். இதில் புதிய வசதி கொண்ட நிறைய நவீன வசதிகளை பெறலாம்.

Android 4.2 OS special features: Gesture typing, Photo Sphere and more

அழகான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கலாம். இப்படி சிறப்பான புகைப்படங்களை பெற இந்த ஃபோட்டோ ஷேரிங் வசதி பயன்படும். இதில் எந்த கோணத்தில் வேண்டுமானாலும் புகைப்படங்களை எடுத்து குவிக்கலாம். இன்னும் சொல்ல போனால் இந்த ஃபோட்டோ ஷேரிங் வசதி, ஐஓஎஸ்-6
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கும் பனோரமா தொழில் நுட்ப வசதியினை போலத்தான் என்று கூறலாம்.
ஜெஸ்ச்சர் டைப்பிங் என்ற இந்த புதிய வசதி மேசேஜ் அனுப்பும் வேலையை இன்னும் எளிதாக்கி கொடுக்கும். இதன் மூலம் வேக வேகமாக டைப் செய்ய வேண்டும் என்ற கவலையில்லாமல் இருக்கலாம். கையசைவின் மூலம் டைப் செய்ய உதவும் இந்த ஜெஸ்ச்சர் டைப்பிங் வசதி சிறப்பான ஒன்றாக இருக்கும்.
வையர்லெஸ் டிஸ்ப்ளே வசதி மக்களுக்கு சிறப்பான வசதியினை வழங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வசதி திரைப்படங்கள் மற்றும் யூடியூப் வீடியோ ஆகியவற்றை பார்க்க உதவுவதோடு, இன்னும் சில வசதிகளை கொடுக்கும்.
வையர்லெஸ் டிஸ்ப்ளே வசதி வாடிக்கையாளர்களை திரைப்படங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களை பரிமாறி கொள்ளவும் உதவும். இப்படி வீடியோக்களை மொபைல்கள் மற்றும் டேப்லட் ஆகியவற்றை எச்டிஎம்ஐ டிவிகளிலும் இணைத்து, எளிதாக பார்க்க உதவும். இது போன்ற இன்னும் பல அருமையான வசதிகளை ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும்.