A+ A-

கூகுள் வழங்கும் புத்தம் புதிய கேலன்டர் அப்ளிக்கேஷன்!

ஆயிரமாயிரம் அப்ளிக்கேஷன்களை வழங்கும் கூகுள் நிறுவனம் புதிதாக கேலன்டர் அப்ளிக்கேஷனை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிக்கேஷனை தனது பிரசித்தி பெற்ற கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் மேப்ஸ், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன், ஜிமெயில் ஃப்ரீ எஸ்எம்எஸ் என்று பல தொழில் நுட்ப வசதிகளை வழங்கிய கூகுள் நிறுவனத்திற்கு இந்த வசதிகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல தான். இருப்பினும் இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில் இருக்கும் வசதிகள் பற்றி பார்க்கலாம்.
இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில் சிறந்த பல வசதிகளை பெற முடியும். விசேஷமான நாட்களை காட்டும் இந்த நாள்காட்டி அப்ளிக்கேஷனில் முக்கியமான நாட்களை குறித்து கொள்ளவும் முடியும், அதோடு இதில் ரிமைன்டர் வசதியினையும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினையும் பெற முடியும்.
நோட்டிஃபிக்கேஷன் வசதியினை கொடுக்கும் இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனில், ஹோம் டைம் சோன் என்ற வசதியினையும் பெறலாம். இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் டவுன்லோட் செய்ய முடியும்.
இந்த கேலன்டர் அப்ளிக்கேஷனை இன்னொரு வழியிலும் பெறலாம். மெயில் அப்ளிக்கேஷனில் இருக்கும் கேலன்டர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தும் பெறலாம்.