A+ A-

ஆப்பிளின் அதிகார பூர்வமான விலை அறிவிப்பு!


ஐபோட் டச் மற்றும் ஐபோட் நேனோவின் விலை விவரங்களின் முடிவு வெளியிடப்படுகிறது. நமது நாட்டில் ஆப்பிளின் ஐபோட் டச் மற்றும் ஐபோட் நேனோவின் அறிமுகத்திற்கு வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். இப்போது இந்த மின்னணு சாதனங்களின் விலை விவரமும் வெளியிடப்படுகிறது.
ஐபோட் டச் 4 இஞ்ச் திரை வசதியினையில் ரெட்டினா டிஸ்ப்ளேவினையும் அழகாக பெறலாம். இந்த ஐபோட் டச் சாதனத்தின் திரை 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். 5 மெகா பிக்ஸல் கொண்ட ஐசைட் கேமரா இதில் மிக பிரசித்தமானதொரு தொழில் நுட்பம் என்று கூறலாம். லித்தியம் அயான் பேட்டரியில் 40 மணி
நேரம் மியூசிக் ப்ளேபேக் வசதியினையும், 8 மணி நேரம் வீடியோ ப்ளேபேக் வசதியினையும் பயன்படுத்த முடியும்.
ஆப்பிளின் அதிகார பூர்வமான விலை அறிவிப்பு!

ஐபோட் நேனோ 2.5 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதில் மல்டி தொடுதிரை வசதியில் இந்த ஐபோட் நேனோவை எளிதாக இயக்கவும் முடியும். 240 X 320 பிக்ஸல் திரை துல்லியம் கொண்ட இந்த ஐபோட் நேனோ லித்தியம் அயான் பேட்டரியில் 30 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் மற்றும் 3.5 வீடியோ ப்ளேபேக் வசதியினை பெறலாம்.
ஆப்பிளின் இந்த ஐபோட் டச் மற்றும் ஐபோட் நேனோ ஆகிய எலக்ட்ரானிக் சாதனத்தின் விலையை பார்ப்பதற்கும் முன்பு இது பற்றிய தொழில் நுட்ப தகவல்களையும் ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம். 5வது ஜெனரேஷன் ஐபோட் டச் 32 ஜிபி வெர்ஷன் 23,900 விலையையும், ஐபோட் டச் 64 ஜிபி வெர்ஷன் 30,000 விலையையும் கொண்டதாக
இருக்கும்.
4வது ஜெனரேஷன் ஐபோட் டச் 16 ஜிபி வெர்ஷன் 15,900 விலையிலும், 32 ஜிபி வெர்ஷன் 19,500 விலையிலும் கிடைக்கும். ஆப்பிளின் புதிய ஐபோட் நேனோ ரூ. 12,500 விலை கொண்டதாக இருக்கும்.

துல்லியத்தினையும் வழங்கும். 5 மெகா பிக்ஸல் கொண்ட ஐசைட் கேமரா இதில் மிக பிரசித்தமானதொரு தொழில் நுட்பம் என்று கூறலாம். லித்தியம் அயான் பேட்டரியில் 40 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் வசதியினையும், 8 மணி நேரம் வீடியோ ப்ளேபேக் வசதியினையும் பயன்படுத்த முடியும்.