A+ A-

கூகுள் – எல்ஜி கூட்டணியில் அடுத்த நெக்சஸ் டேப்லெட்


கடந்த வரும் கூகுள், சாம்சங் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து கேலக்ஸி நெக்சஸ் என்ற ஸ்மார்ட்போனைக் களமிறக்கியது. தற்போது கூகுள் எல்ஜி நிறுவனத்துடன் இணைந்து புதிய நெக்சஸ் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் எப்போது இந்த அறிமுகம் நடக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த மாத இறுதியில் இந்த அறிவிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுபோல் இந்த புதிய நெக்சஸ் போன் எல்ஜி ஆப்டிமஸ் ஜி ஸ்மார்ட்போனைப் போல இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த புதிய போனுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால் இந்த போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் என்று தெரிகிறது. அதோடு க்வல் காம் சினாப்ட்ராகன் க்வாட் கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம், ட்ரூ ஹை டெபினிசன் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 8எம்பி கேமரா மற்றும் வெளியில் எடுக்க முடியாத பேட்டரி போன்ற தொழில் நுட்பங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் இருப்பதால் இதன் 8ஜிபி மெமரியை 16ஜிபி அளவிற்கு விரிவுபடுத்த முடியும். அதோடு இந்த போனில் பல புதிய தொழில் நுட்ப வசதிகளை எதிர்பார்க்கலாம். விரைவில் இந்த புதிய போனை சந்தையில் எதிர்பார்க்கலாம்.