A+ A-

சாம்சங் களமிறக்கும் விண்டோஸ் 8 அல்ட்ராபுக் மற்றும் புதிய டேப்லெட்டுகள்


மொபைல் சந்தையில் தனி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தி இருக்கும் சாம்சங் தனது சமீபத்தில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் தனது புதிய அல்ட்ராபுக்கையும் மற்றும் உயர்தர டேப்லெட்டுகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

சாம்சங்கின் ஸ்மார்ட் பிசி பிரிவில் வரும் இந்த புதிய வி்ண்டோஸ் 8 அல்ட்ராபுக் 809.99 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்கில் கோர் ஐ3 மற்றும் சூப்பரான டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 24 எக்ஸ்ப்ரஸ் கேச் கிக்ஸ் கொண்ட 500ஜிபி ஹார்ட் ட்ரைவ் போன் சூப்பரான வசதிகள் உள்ளன.
அல்ட்ராபுக்கைத் தவிர்த்து சாம்சங் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் புதிய டேப்லெட்டுகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டுகள் 11.6 இன்ச் அளவு டிஸ்ப்ளேகளைக் கொண்டிருக்கின்றன.
அட்டிவ் ஸ்மார்ட் பிசி 500டி என்று அழைக்கப்படும் டேப்லெட் கீபோர்டுடன் சேர்த்து 749.99 அமெரிக்க டாலர்களுக்கும் கீபோர்டு இல்லாமல் 649.99 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றன. 700டி டேப்லெட் 1,199.99 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றன.
500டி டேப்லெட் ஆட்டம் ஸட்2760 ப்ராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் 700டி கோர் ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன.
விண்டோஸ் 8 களமிறங்கும் அக்டோபர் 26 அன்றே சாம்சங்கின் மேற்சொன்ன புதிய விண்டோஸ் 8 அல்ட்ராபுக் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவை களமிறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.