A+ A-

எல்லா முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் ஆகாஷ் 2 டேப்லெட்




சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட இரண்டு ஆகாஷ் 2 டேப்லெட்டுகள் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரான நரேந்திர மோடிக்கு இந்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் அவர்களால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு துறை இந்தியாவின் எல்லா முதலமைச்சர்களுக்கு இந்த ஆகாஷ் டேப்லெட்டை அனுப்ப இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை டேப்லெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆகாஷ் 2 டேப்லெட் ஆகாஷ் டேப்லெட்டின் அப்டேட் செய்யப்பட்ட வடிவத்தில் வருகிறது. பழைய ஆகாஷ் டேப்லெட் 7 இன்ச் ரெசிஸ்டிவ் தொடு திரை, ஆன்ட்ராய்டு இயங்கு தளம், 366 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர் போன்றவற்றைக் கொண்டிருந்தன.
ஆனால் இந்த புதிய ஆகாஷ் 2 டேப்லெட் டூவல் கோர் கோர்டெக்ஸ் எ9 ப்ராசஸரில் வருகிறது. அதனால் இந்த டேப்லெட் மிகவும் தரமாக இருக்கும் என்று நம்பலாம். இந்த டேப்லெட்டைத் தயாரித்து வரும் டேட்டா விண்ட் நிறுவனம் இந்த டேப்லெட்டை பரிசோதனைக்காக ஐடி மும்பைக்கு அனுப்பி வைத்தது.
தற்போது இந்த ஆகாஷ் டேப்லெட் இந்த அக்டோபருக்குள் களம் இறங்கிவிடும் என்று தெரிகிறது.